இலங்கைக் கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 26 பேரை, நிபந்தனைகளுடன் விடுதலை செய்தும், மீனவர்களின் 4 படகுகளை நாட்டுடமையாக்கியும் ஊர்க்காவல்துறை நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
ராமேசுவரத்தைச் சேர்ந்த 3 விசைப்படகுகள் அதில் இருந்த 22 மீனவர்கள், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு விசைப்படகு அதில் இருந்த 4 மீனவர்கள் என மொத்தம் 26 மீனவர்களை, எல்லை தாண்டியக் குற்றஞ்சாட்டின்பேரில் இலங்கைக் கடற்படையினர் கடந்த டிசம்பரில் நடுக்கடலில் சிறைப்பிடித்தனர்.
இலங்கையில் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், கரோனா பரிசோதனைக்குப் பிறகு தடுப்பு முகாம்களில் மீனவர்கள் வைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் நீதிபதி அந்தோனிப்பிள்ளை ஜூட்சன் முன்னிலையில் இவ்வழக்கு விசாரணை நேற்று நடைபெற்றது. இந்த மீனவர்கள் மீண்டும் இலங்கை எல்லைக்குள் மீன் பிடித்தால் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் 26 மீனவர்களையும் நீதிபதி விடுதலை செய்தார்.
மேலும் இவர்களின் 4 விசைப்படகுகளையும் அரசுடமையாக்கி உத்தரவிட்டார். விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் விமானம் அல்லது கடல் வழயாக தாயகம் திரும்புவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago