வர்த்தக ரீதியில் நிலத்தடி நீரை எடுக்கக் கூடாது உயர் நீதிமன்றம் உத்தரவு

By செய்திப்பிரிவு

வர்த்தக ரீதியில் நிலத்தடி நீரை எடுக்கக் கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை அயன்பாப்பாக்கு டியைச் சேர்ந்த வி.ஆஸ்டின், உயர் நீதிமன்றக் கிளையில் தாக் கல் செய்த மனு:

பெருங்குடி அயன் பாப்பாக் குடியில் பலர் தங்கள் நிலத்தில் சட்டவிரோதமாக நிலத்தடி நீரை எடுத்து விற்கின்றனர். இதற்கு அரசிடம் அனுமதி பெறவில்லை. இதனால் அயன்பாப்பாக்குடி பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருகிறது. எனவே சட்டவிரோதமாக நிலத்தடி நீர் விற்பனை செய்பவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யவும், நிலத்தடி நீர் எடுக்க பயன்படுத்தும் ஜெனரேட்டர் மற்றும் லாரிகளை பறிமுதல் செய்யவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட் டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில் பொது உப யோகம் என்ற பெயரில் சட்டவிரோதமாக நிலத் தடி நீரை உறிஞ்சி விற்பனை செய்கின்றனர். இதைத் தடுக்க அதிகாரிகளுக்கு மனு அனுப்பியும் நடவடிக்கை எடுக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: மதுரை வடக்கு வட்டாட்சியர் தாக்கல் செய்த பதில் மனுவில், அயன்பாப்பாக்குடியில் 8 பேர் அரசிடம் அனுமதி பெறா மல் நிலத்தடி நீர் எடுத்து விற்பனை செய்து வருவதாகக் கூறப் பட்டுள்ளது. இதை அனுமதித்தால் குற்றச்செயலை ஊக்குவிப்பது போலாகும்.

எனவே, இந்த வழக்கு நிலு வையில் இருக்கும் வரை நிலத்தடி நீரை எடுக்க அனுமதி வழங்கக் கூடாது. வர்த்தக நோக்கத்தில் நிலத்தடி நீர் எடுக்கக்கூடாது. மனு தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத் தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்