பொங்கல் சமயத்தில் சிவகங்கை முக்கியச் சாலையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தியால் வியாபாரிகள், பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர்.
பொங்கல் பண்டிகைக்கு முந்தைய நாள், சிவகங்கை அரண்மனை வாசலில் பொங்கல் பொருட்கள் வாங்குவதற்கு பல்லாயிரம் பேர் வந்து செல்வர். இதற்காக அரண்மனைவாசலில் உள்ள சாலைகளில் கரும்பு, மஞ்சள்கொத்து, தேங்காய், பழங்கள் போன்ற பொருட்களை விற்க வியாபாரிகள், விவசாயிகள் தற்காலிகக் கடைகளை அமைத்திருப்பர்.
இந்நிலையில் பொங்கல் பண்டிகைக்கு முந்தைய நாளான நேற்று அரண்மனை வாசலில் முதல்வரை அவதூறாகப் பேசிய திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினைக் கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அமைச்சர் ஜி.பாஸ்கரன், மாவட்டச் செயலாளர் செந்தில்நாதன், மாநில எம்ஜிஆர் மன்ற இளைஞரணி துணை அமைப்பாளர் கருணாகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்துக்காக சாலையோரத்தில் வியாபாரம் செய்த வியாபாரிகள், விவசாயிகளை போலீஸார் அப்புறப்படுத்தினர். மேலும் பொங்கல் பொருட்கள் வாங்க வந்த பொதுமக்கள் மிகுந்த சிரமப்பட்டனர்.
கரும்பு, மஞ்சள்கொத்து போன்ற பொருட்களை விற்க முடியாமல் விவசாயிகளும் பாதிக்கப்பட்டனர்.
பொங்கல் சமயத்தில் ஆர்ப்பாட்டத்துக்கு வேறு இடத்தை ஒதுக்காமல் அரண்மனை வாசலை ஒதுக்கிய போலீஸார் மீது வியாபாரிகள், விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் அதிருப்தி தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago