மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, வேளாண் சட்ட நகல்களை எரிக்கும் போராட்டம், கோவில்பட்டி அருகே லிங்கம்பட்டியில் நடந்தது.
தமிழ்நாடு விவசாய சங்க தாலுகா செயலாளர் லெனின் குமார் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, குலசேகரபுரம் ஊராட்சி மன்ற தலைவர் முரளிதரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் பாலமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago