விவேகானந்தர் பிறந்த நாள் ஊர்வலம்

By செய்திப்பிரிவு

சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாள் விழா தேசிய இளைஞர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, கோவில்பட்டி சுவாமி விவேகானந்தா கேந்திரம் சார்பில், செண்பகவல்லி அம்மன் கோயில் முன்பிருந்து விவேகானந்தரின் உருவப்படத்துடன் ஊர்வலம் புறப்பட்டது.

ஊர்வலத்துக்கு திருநெல்வேலி விவேகானந்தா கேந்திர பொறுப்பாளர் முத்துசாமி தலைமை வகித்தார். தொழிலதிபர் ஆறுமுகம் தொடங்கி வைத்தார்.

பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியை திருவேங்கடம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியை செல்வி தொடங்கி வைத்தார். பண்பாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை கோவில்பட்டி விவேகானந்தா கேந்திர பொறுப்பாளர் பரமகுரு செய்திருந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்