மீன் தொழிலாளர் சங்கத்தினர் கன்னியாகுமரி ஆட்சியர் அரவிந்திடம் அளித்த மனு விவரம்: குளச்சல் மீன்வள உதவி இயக்குநர் அலுவலக எல்கைக்கு உட்பட்ட 543 மீன்பிடி படகுகளுக்கு மானிய மண்ணெண்ணெய் வழங்க வலியுறுத்தி, கடந்த நவம்பர் 23-ம் தேதி நாகர்கோவில் மீன்துறை உதவி இயக்குநர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
அப்போது, 10 நாட்களுக்குள் மானிய மண்ணெண்ணெய் வழங்குவதாக அதிகாரிகள் உத்திரவாதம் அளித்ததால் போராட்டம் கைவிடப்பட்டது. ஆனால், இதுவரை மண்ணெண்ணெய் வழங்கப்படவில்லை. எனவே, மண்ணெண்ணெய் வழங்க கோரி வருகிற 19-ம் தேதி தூத்தூர் மீன்வள உதவி இயக்குநர் அலுவலகம் முன்பு போராட்டமும், 27-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை நாகர்கோவில் மீன்வளத்துறை அலுவலகம் முன்பு தொடர் போராட்டமும் நடத்தப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago