பத்மநாபபுரம் நகராட்சியில் மருந்துகோட்டை நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையத்தை ஆட்சியர் மா.அரவிந்த் ஆய்வு செய்தார்.
ஒருங்கிணைந்த நகர்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.2.13 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை பார்வையிட்டு, பணிகளை விரைந்து மேற்கொள்ள அறிவுறுத்தினார். மேலும், பொதுமக்களுக்கு தட்டுப்பாடின்றி சீரான முறையில் குடிநீர் வழங்கவும், ஆன்லைன் மூலம் பொதுமக்களிடம் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது உடனடி ஆய்வு செய்து பதிலளிக்கவும் அலுவலர்களை கேட்டுக்கொண்டார்.
ஆய்வின்போது பத்மநாபபுரம் நகராட்சி ஆணையர் பெர்பெற்றி டெரன்ஸ், பொறியாளர் லதா, சுகாதார ஆய்வாளர்கள் முத்துராமலிங்கம், ராஜாராம் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago