தூத்துக்குடி விஇ சாலையில் இயங்கி வரும் பிரபலமான ஜவுளிக் கடைக்கு மாநகராட்சி அதிகாரிகள் நேற்று சீல் வைத்தனர்.
தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இயங்கி வரும் பிரபலமான ஜவுளிக் கடை தூத்துக்குடி விஇ சாலையில் அமைந்துள்ளது. இந்த ஜவுளிக்கடையுடன், நகைக்கடை மற்றும் சூப்பர் மார்க்கெட் ஆகியவையும் சேர்ந்து அமைந்துள்ளன. இந்த ஜவுளிக் கடை கட்டிடம், கட்டிட அனுமதிக்கு மாறுதலாகவும், அனுமதிக்கு கூடுதலாகவும் மற்றும் அனுமதியின்றி கூடுதல் பகுதி கட்டியதாகவும் தூத்துக்குடி மாநகராட்சி அதிகாரிகள் கடந்த ஆகஸ்ட் மாதம் 21-ம் தேதி சீல் வைத்தனர்.
அப்போது, விதிமுறை மீறல்களை சரி செய்ய ஜவுளிக் கடை நிர்வாகம் 3 மாதம் அவகாசம் கோரியது. இதையடுத்து 3 மாத அவகாசம் அளிக்கப்பட்டு கடையை திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், மூன்று மாதங்கள் கடந்தும் விதிமுறை மீறல்களை ஜவுளிக் கடை நிர்வாகம் சரி செய்யவில்லை. மேலும், கூடுதல் அவகாசம் கேட்டு முறைப்படி மாநகராட்சியை அணுகவும் இல்லை.
இதையடுத்து இந்த ஜவுளிக் கடைக்கு சீல் வைக்க மாநகராட்சி ஆணையர் வீ.ப.ஜெயசீலன் உத்தரவிட்டார். மாநகராட்சி அதிகாரிகள் நேற்று காலை அந்த கடையை பூட்டி சீல் வைத்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago