சுசீந்திரம் ஆஞ்சநேயருக்கு ஷோடச அபிஷேகம்

By செய்திப்பிரிவு

ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு சுசீந்திரம்தாணுமாலய சுவாமி கோயிலில் நேற்று அதிகாலையில் ராமபிரானுக்கு அபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து 18 அடி உயர ஆஞ்சநேயருக்கு அபிஷேக பொருட்கள் நீலகண்டசுவாமி கோயிலில் இருந்து ஊர்வலமாக எடுத்துவரப்பட்டன.

முதலில் 1000 லிட்டர் பாலால் ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து 16 வகை பொருட்களால் ஷோடச அபிஷேகம் நடைபெற்றது. சந்தனம், குங்குமம், திருநீறு, தயிர், தேன், நல்லெண்ணெய், தேன், களபம், பஞ்சாமிர்தம், இளநீர், எலுமிச்சை சாறு, கரும்பு சாறுபோன்ற பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. ஷோடச அபிஷேகத்தை காண சுசீந்திரம் கோயிலில் நேற்று அதிகாலையில் இருந்தே திரளான பக்தர்கள் திரண்டிருந்தனர்.

தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி ஆகியோர் தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. மாலையில் ஆஞ்சநேயருக்கு புஷ்பாபிஷேகம் நடை பெற்றது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்