பாரா விளையாட்டு போட்டிகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்தில் காஷ்மீரில் தொடங்கிய சைக்கிள் பயணம் நேற்று கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் நிறைவடைந்தது.
மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், அவர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தும் விதமாகவும் காஷ்மீரில் இருந்து கடந்த நவம்பர் மாதம் 18-ம் தேதி பாரா சைக்கிள் ஓட்டுநர்கள், எல்லை பாதுகாப்பு படை வீரர்களுடன் சைக்கிள் பேரணி தொடங்கினர்.
44 நாட்கள் 3,842 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து இந்த சைக்கிள் பயணம் நேற்று கன்னியாகுமரி வந்தடைந்தது.
வெற்றிகரமாக சைக்கிள் பயணத்தை முடித்த மகிழ்ச்சியில் முக்கடல் சங்கமத்தில் பயணக் குழுவினர் சைக்கிளை கையில் ஏந்தியவாறு உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.
சைக்கிள் பயணக் குழுவினரை எல்லை பாதுகாப்புப்படை டிஐஜி பேபிஜோசப், முதல் பாரா சைக்கிள் ஓட்டுநர் ஆதித்யா மேத்தா மற்றும் குமரி ஜவான்ஸ் அமைப்பினர் வரவேற்று பாராட்டு தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago