நாகர்கோவில்: திமுக சார்பில் நாகர்கோவில் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் கிராமசபை கூட்டங்கள் சுரேஷ்ராஜன் எம்எல்ஏ தலைமையில் நடந்து வருகிறது. அனுமதியின்றி கிராமசபை கூட்டங்களை நடத்தியதாக சுரேஷ்ராஜன் மீது ஏற்கெனவே ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. தற்போது கோட்டாறு காவல் நிலையத்தில் அவர் மீது மேலும் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இடலாக்குடி, வடலிவிளை, இருளப்பபுரத்தில் அனுமதியின்றி கிராமசபை கூட்டங்கள் நடத்தியதாக எம்எல்ஏ உட்பட 200-க்கும் மேற்பட்ட திமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago