நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் அழிக்கால் மீனவ கிராமத்தில் கடல் சீற்றத்தால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பிரதீப் என்பவர் மரணமடைந்தார். பிரதம மந்திரி நிவாரண நிதியில் இருந்து அவரது குடும்பத்துக்கு ரூ.2 லட்சத்துக்கான காசோலையை அவரது தந்தை மரியதாசனிடம் மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் வழங்கினார்.
இதுபோல் அழிக்காலில் கடல் சீற்றத்தின் போது வீடு இடிந்து பலத்த காயம் அடைந்த லிபின் என்பவரின் தாயார் குணசீலி, ஆன்றனி விதுல் என்பவரின் தாயார் ரோசலினுக்கு தலா ரூ.50 ஆயிரம் பிரதம மந்திரி நிவாரண நிதியில் இருந்து வழங்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago