கீழடி, கொற்கை உள்ளிட்ட 7 இடங்களில்செப்டம்பர் வரை அகழாய்வுக்கு அனுமதி உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் கீழடி, ஆதிச்சநல்லூர், சிவகளை, கொடுமணல், மயிலாடும்பாறை, கொற்கை உள்ளிட்ட 7 இடங்களில் அடுத்த ஆண்டு செப்டம்பர் வரைஅகழாய்வுப் பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

தூத்துக்குடியைச் சேர்ந்த எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:

தமிழகத்தில் ஆதிச்சநல்லூர், கீழடி, கொடுமணலில் அடுத்த கட்ட அகழாய்வுப் பணிகளை மேற்கொள்ளவும், தாமிரபரணி ஆற்றுப்படுகை, சிவகளை, கொந்தகையில் அகழாய்வைத் தொடங்கவும், தமிழக தொல்லியல் துறைக்கு அனுமதி வழங்க மத்திய தொல்லியல் துறைக்கு உத்தரவிட வேண்டும் என தெரிவித்திருந்தார்.

இந்த மனு, நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஆர்.அழகுமணி வாதிட்டார்.

மத்திய அரசின் உதவி சொலிசிட்டர் ஜெனரல் எல்.விக்டோரியா கவுரி தாக்கல் செய்த பதில் மனுவில், கீழடி, ஆதிச்சநல்லூர், சிவகளை, கொடுமணல், மயிலாடும்பாறை, கொற்கை மற்றும் கங்கைகொண்ட சோழபுரத்தில் 2021-ம் ஆண்டு செப்டம்பர் வரை அகழாய்வுப் பணிகளை மேற்கொள்ள மத்திய தொல்லியல் துறை அனுமதி வழங்கியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதைப் பதிவு செய்து கொண்டு, மனுவை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்