திமுகவுக்கு போட்டியாக ஒன்றியங்கள், வார்டுகள் பிரிப்பு மதுரை கிழக்கு அதிமுகவில் புதிய நிர்வாகிகள் நியமனம்

By செய்திப்பிரிவு

மதுரை கிழக்கு மாவட்ட அதிமுக.வில் ஒன்றியங்கள் பிரிக்கப்பட்டு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். இதில், அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் ஆதரவாளர்கள் பலரின் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன.

மதுரை மாவட்ட அதிமுக, நிர்வாக ரீதியாக மதுரை மாநகர், புறநகரில் கிழக்கு, மேற்கு என 3 மாவட்டங்களாகச் செயல்படுகின்றன. மாநகர் செயலராக அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, மேற்கு மாவட்டச் செயலராக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், கிழக்கு மாவட்டச் செயலராக வி.வி.ராஜன்செல்லப்பா ஆகியோர் உள்ளனர்.

திமுக.வில் சமீபத்தில்தான் 6 ஒன்றியங்களை 15 ஆக பிரித்து நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து ராஜன்செல்லப்பா பரிந்துரையின் பேரில் தற்போது கிழக்கு மாவட்ட அதிமுகவிலும் ஒன்றியங்கள், வார்டுகள் பிரிக்கப்பட்டு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து அதிமுக ஒருங்கிணைப் பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் கே.பழனிசாமி ஆகியோர் வெளியிட்ட அறிவிப்பு:

ஆனையூர், திருப்பாலை, வண்டியூர், அவனியாபுரம் கிழக்கு, அவனியாபுரம் மேற்கு, திருப் பரங்குன்றம் கிழக்கு, திருப்பரங் குன்றம் மேற்கு என பகுதிகள் பிரிக் கப்பட்டுள்ளன. அதேபோல் மதுரை கிழக்கு, மேலூர், கொட்டாம்பட்டி ஒன்றியங்கள் தலா 2 ஆக பிரிக்கப்பட்டுள்ளன. பிரிக்கப்பட்ட பகுதிகளின் செயலர்களாக ஆனை யூர்-டி.கோபி, திருப்பாலை-எஸ்.ஜீவானந்தம், வண்டியூர்-ஆர்.செந்தில் குமார், அவனியாபுரம் கிழக்கு-எஸ்.முருகேசன், அவனியாபுரம் மேற்கு-எம்.கர்ணா, திருப்பரங்குன்றம் கிழக்கு-வழக்கறிஞர் எம்.ரமேஷ், திருப்பரங்குன்றம் மேற்கு-எஸ்.எம்.பி.பன்னீர்செல்வம், கிழக்கு ஒன்றியம்(வடக்கு)-தக்கார் எம்.பாண்டி, கிழக்கு ஒன்றியம் (தெற்கு)-சக்கிமங்கலம் பி.கணேசன், மேற்கு ஒன்றியம்(வடக்கு)-என்.வாசு என்ற பெரியண்ணன், மேலூர் ஒன்றியம்(வடக்கு)-கே.சி.பொன்ராஜேந்திரன், மேலூர் ஒன்றியம்(தெற்கு)- கே.பொன்னுச் சாமி, கொட்டாம்பட்டி ஒன்றி யம்(வடக்கு)-கேவிவிசி.குலோத் துங்கன், கொட்டாம்பட்டி ஒன்றியம் (தெற்கு)-பி.வெற்றிச் செழியன் ஆகியோர் செயலர்களாக நியமிக்கப் பட்டுள்ளனர். மேலும் இணைச் செயலர்கள், மாவட்டப் பிரதிநிதிகள் என பலர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல் கிழக்கு மாவட்டத்தில் இடம்பெற்றுள்ள மாநகராட்சி வார்டுகளின் செயலர்கள் பலரும் மாற்றப்பட்டுள்ளனர். இதன் விவரம்: வார்டு-2-எஸ்.ராமமூர்த்தி, வார்டு 3-ஆர்.சரவணன், எஸ்.ராஜேஸ்கண்ணா, வார்டு 4-வி.ராமகிருஷ்ணன், ஆர்.பிரகாஷ், வார்டு 24-எஸ்.ராம்நாத், கே.நாகராஜன், வார்டு 25-எஸ்.முருகன், வார்டு 26- கே.போஸ், வார்டு 48-ஓ.பி.சுரேஷ், வார்டு 49-எம்.வேல்முருகன், வார்டு 28-வி.டிமகேஷ்வரன், வார்டு 29-எஸ்.சரவணன், எம்.ஆனந்தன், வார்டு 32-பி.குமார், வார்டு 56-வி.எம்.செல்லப்பாண்டியன், வார்டு 58-எஸ்.செல்வம், வார்டு 60-எஸ்.எஸ்.சத்தியமூர்த்தி, வார்டு 55-சி.கணேசமூர்த்தி, வார்டு 59-பால் பாண்டி, வார்டு 61-கே.பி.சரவணன், வார்டு 62-எம்.கருத்தமுத்து, வார்டு 94-எஸ்.ஜெயகல்யாணி, வார்டு 95-பொன்.முருகன், வார்டு 96-எஸ்.நாகரத்தினம், வி.சுப்பிரமணி, வார்டு 97-பி.முருகேசன், எம்.ராஜ்குமார், வார்டு 98-என்.எஸ்.பாலமுருகன், வார்டு 99-ஆர்.கோபால் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து அதிமுக நிர்வாகிகள் கூறுகையில், "முன்னாள் எம்எல்ஏ. எம்.முத்துராமலிங்கம் மகன் கர்ணா பகுதி செயலாளராக்கப்பட்டுள்ளார். அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் ஆதரவாளர்களான முனியாண்டி, பாலமுருகன், முருகேசன், ராமகி ருஷ்ணன், முருகன் என பலரின் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன. முனியாண்டி திருப்பரங்குன்றம் இடை த்தேர்தலில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்டவர். ராஜன்செல்லப்பா தனக்கு நெருக்கமானவர்களுக்கு பதவி கொடுத்துள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட பலரின் பதவி பறிக்கப்பட்டுள்ளது. திமுகவுக்குப் போட்டியாக பல பகுதிகள் பிரிக்கப்பட்டு, புதியவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இது கட்சிக்கு பலன் தருமா என்பது தேர்தல் நெருங்கும்போதுதான் தெரியும்" என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்