பசும்பொன் தேவர் நினைவிடத்தில் பெண்கள் பால்குடம் எடுத்தும், இளைஞர்கள் ஜோதி ஓட்டம் எடுத்து வந்தும் அஞ்சலி செலுத்தினர்.
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் 113-வது ஜெயந்தி விழா, 58-வது குரு பூஜை விழா நடைபெற்று வருகிறது. இன்று (அக்.30) அரசு சார்பில் தேவர் குரு பூஜை விழா கொண்டாடப்படுகிறது.
பசும்பொன் மற்றும் கமுதி அருகில் உள்ள கிராமப் பெண்கள் நேற்று காலை பால் குடம் எடுத்து வந்தும், இளைஞர்கள் ஜோதி ஓட்டம் எடுத்து வந்தும் தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.
இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் பசும்பொன் தேவர் சிலைக்கு நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் ஆன்மிக அரசியல் வெல்லும். திமுக, அதிமுகவினர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினை விடத்தில் மரியாதை செலுத்தத் தகுதியற்றவர்கள். பெண்களை தொடர்ந்து அவதூறு பேசும் திருமா வளவனை திமுக பாதுகாத்து வரு கிறது எனக் கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago