‘கரோனா’ நோயாளிகளுக்கு வழங்கப்படும் அம்மா கிச்சன் உணவில் நோய் எதிர்ப்பு சக்தி மருத்துவக் குழுவினர் அறிக்கை

By செய்திப்பிரிவு

மதுரையில் கரோனா நோயாளிகளுக்கு கடந்த 119 நாட்களாக ஜெ. பேரவை சார்பில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஏற்பாட்டில் அம்மா கிச்சன் மூலம் உணவு வழங்கப்படுகிறது.

அகில இந்திய அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்க நிர்வாக குழு உறுப்பினர் டாக்டர் மருதுபாண்டியன், அகில இந்திய மருத்துவமனையின் கூட்டமைப்பு தமிழ்நாட்டின் கிளைச் செயலாளர் டாக்டர் பாலமுருகன் ஆகியோர் நேற்று அம்மா கிச்சனில் ஆய்வு செய்து அறிக்கை வழங்கினர். அவர்கள் செய்தியாளர்களிடம் கூறி யதாவது: இங்கு தயாரிக்கப்படும் உணவை நாங்கள் ஆய்வு செய்தபோது அதிகமாக வெங்காயம், பூண்டு, மிளகு, சீரகம் உள்ளிட்ட மருத்துவ குணம் மிக்க பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளன. வெங்காயம் நுரையீரலை சுத்தப்படுத்தும், ரத்தக் கொதிப்பை கட்டுப்படுத்தும், உடல் சூட்டைத் தணிக்கும், நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும். பூண்டு சுவாசத் தடையை நீக்கும், ரத்தக் கொதிப்பை தணிக்கும், சர்க்கரையை கட்டுப்படுத்தும். அதேபோல் மிளகு நெஞ்சிலுள்ள சளியை குறைக்கும், நுரையீரலை சரிசெய்யும், அதேபோல் தொண்டையில் வலி ஏற்பட்டால் அதற்கு சரியான மருந்து மிளகு ஆகும். மேலும் உணவுப்பொருட்கள் சரியான பக்குவத்தில் தயார் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக மஞ்சள் பொடி, சீரகம், உளுந்து, முட்டை உள்ளிட்ட பொருட்கள் உடம்பிற்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்