காவல் நிலைய சுவரில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு ஓவியங்கள்

By செய்திப்பிரிவு

திருப்பரங்குன்றம் மகளிர் காவல் நிலைய சுவரில் பெண்கள், குழந் தைகள் பாதுகாப்பு தொடர்பாக விழிப்புணர்வு ஓவியங்கள் வரையப் பட்டுள்ளன.

காவல் நிலையங்களில் பெண் களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கப் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று மதுரை காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா அறிவுறுத்தியிருந்தார்.

இதன்படி, திருப்பரங்குன்றம் மகளிர் காவல் ஆய்வாளர் மதனகலா, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்களை தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு ஓவியங்களை காவல் நிலைய சுற்றுச் சுவரில் வரைய ஏற்பாடு செய்துள்ளார்.

பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த துண்டுப்பிரசுரங்களை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

காவல் நிலையத்துக்குப் புகார் தெரிவிக்க வரும் பெண்களுக்கு உரிய ஆலோசனைகளை வழங்கி வருகிறார். ஆய்வாளரின் இச்செயல் அப்பகுதி பெண்களிடையே வர வேற்பைப் பெற்றுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்