பயிர் காப்பீடு இழப்பீடு வழங்காததால் போராட்டம் நடத்த இளையான்குடி விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.
இளையான்குடி வட்டத்தில் 30 ஆயிரம் ஏக்கருக்கு மேல் நெல் சாகு படி செய்யப்படுகிறது. இப்பகுதி விவசாயிகள் கண்ணமங்கலம், நாக முகுந்தன்குடி, சூராணம் உள்ளிட்ட 19 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் நெல் பயிரை காப்பீடு செய்கின்றனர்.
இந்நிலையில் அதிகாரிகளின் தவறால் பயிர் காப்பீடு செய்தோர்களில், 2018-ம் ஆண்டு 750 விவசாயிகளுக்கும், 2019-ம் ஆண்டு 450 பேருக்கும் இழப்பீடு கிடைக்கவில்லை. விரைவில் இழப்பீடு வழங்காவிட்டால் அவர்கள் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
இது குறித்து முன்னாள் எம்எல்ஏ மதி யரசன் கூறியதாவது: இளையான்குடி வட் டத்தில் ஒவ்வொரு கூட்டுறவு சங்கத்திலும் 10 முதல் 20 விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு இழப்பீடு கிடைக்கவில்லை. ஒரே சமயத்தில் பதிவு செய்தவர்களில் சிலருக்கு மட்டும் இழப்பீடு மறுப்பது வேதனை அளிக்கிறது. 2 ஆண்டுகளாக விடுதலான 1,200 விவசாயிகளுக்கும் முழுமையாக பயிர் காப்பீடு இழப்பீடு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் விவசாயிகளை ஒன்று திரட்டி போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம் என்று கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago