தென்காசியில் மிதமான மழை : பாபநாசத்தில் 11 மி.மீ. பதிவானது

தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழையின் தீவிரம் குறைந்து ள்ளது. பகலில் வெயிலின் தாக்கம் சற்று அதிகரித்து காணப்படுகிறது. இரவில் பனிப்பொழிவு அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் மாவட்டத்தில் சில இடங்களில் லேசான மழை பெய்தது. நேற்று காலை 8 மணி வரை 24 மணி நேரத்தில் கருப்பாநதி அணையில் 5 மி.மீ., அடவிநயினார் அணையில் 4 மி.மீ., கடனாநதி அணையில் 3 மி.மீ., சிவகிரியில் 2 மி.மீ. மழை பதிவானது.

கடனாநதி அணை நீர்மட்டம் 83.20 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் 80.25 அடியாக வும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 71.20 அடியாகவும், குண்டாறு அணை நீர்மட்டம் 36.10 அடியாகவும், அடவிநயினார் அணை நீர்மட்டம் 131.50 அடியாகவும் இருந்தது.

பாபநாசத்தில் 11 மி.மீ. மழை

திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் நேற்று காலை நிலவரப்படி 11 மி.மீ. மழை பதிவாகி யிருந்தது. இதுபோல் சேர்வலாறு- 9 மி.மீ., மணி முத்தாறு- 10 மிமீ., சேரன்மகாதேவி- 5, களக்காடு- 4.2, மூலைக்கரைப்பட்டி- 8, திருநெல்வேலி- 1 மி.மீ. மழை பெய்திருந்தது. பாபநாசம் அணை நீர்மட்டம் 139.55 அடியாக இருந்தது. அணை க்கு விநாடிக்கு 1,373 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 1,004 கனஅடி தண்ணீர் திறந்துவிடப் பட்டிருந்தது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 116.58 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு வரும் 1,400 கனஅடி தண்ணீரும் அப்படியே உபரியாக வெளியேற்றப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்