மார்த்தாண்டம் சிராயன்குழி பகுதியில் போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்துக்கிடமாக நின்ற இருவரை போலீஸார் பிடித்து விசாரித்தனர். அவர்களை சோதனை செய்தபோது மெழுகுபோன்ற திமிங்கலத்தின் உமிழ்நீரை (ஆம்பர் கிரீஸ்) வைத்திருந்தனர். நறுமணப் பொருள் தயாரிக்க இது பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இதனை விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும்.
இருவரும், திருநெல்வேலி மாவட்டம் மாவடியை சேர்ந்த சுபாஷ் (27), நாங்குநேரியைச் சேர்ந்த மிக்கேல்ராஜா (30) என்பது தெரியவந்தது. தக்கலை கீழக்குறிச்சியைச் சேரந்த ராஜேஷ்ராஜா என்பவருக்கு, திமிங்கல உமிழ்நீரை விற்கவந்ததும், இதற்காக ரூ.2 லட்சம் பேரம் பேசி, ரூ.10 ஆயிரம் முன்பணம் பெற்றதாகவும் தெரிவித்தனர். சுபாஷ், மிக்கேல்ராஜா ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago