தேசிய ஜூனியர் ஹாக்கி போட்டியில் பங்கேற்கும் - வெளிமாநில வீரர்களுக்கு கரோனா பரிசோதனை :

By செய்திப்பிரிவு

கோவில்பட்டிக்கு வந்த வெளிமாநில ஹாக்கி வீரர்களுக்கு நேற்று கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

கோவில்பட்டியில் உள்ள செயற்கை இழை ஹாக்கி மைதானத்தில் நாளை (16-ம் தேதி) முதல் 25-ம் தேதி வரை தேசிய ஜூனியர் ஹாக்கிப் போட்டி நடைபெறுகிறது.

30 மாநிலங்களைச் சேர்ந்த 540 வீரர்கள் இப்போட்டியில் கலந்துகொண்டு விளையாடு கின்றனர். இதில் பங்கேற்பதற்காக வெளிமாநிலங்களைச் சேர்ந்த ஹாக்கி வீரர்கள் நேற்று முதல் கோவில்பட்டிக்கு வர தொடங்கி உள்ளனர். ரயில்கள் மூலம் வந்த வீரர்கள், கோவில்பட்டி நேஷனல் பொறி யியல் கல்லூரி விடுதியில் தங்கியுள்ளனர்.

மேற்கு வங்கம், ஒடிசா, பஞ்சாப், உத்திரகாண்ட், மிசோரம், கர்நாடகா, மகாராஷ் டிரா, தமிழ்நாடு ஆகிய 8 மாநிலங்களைச் சேர்ந்த ஹாக்கி வீரர்கள் தற்போது வந்துள்ளனர்.

ஒவ்வொரு மாநில அணி வீரர்களையும் சமூக இடைவெளியுடன் வரிசையாக நிற்க வைத்து, அவர்களின் ஆதார் அட்டையை கொண்டு பெயர் மற்றும் முகவரியை பதிவு செய்தனர். பின்னர் அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

காலை 7.30 மணிக்கு தொடங் கிய பரிசோதனை முகாம், பிற்பகல் 2 மணி வரை நடந்தது. நேற்று மொத்தம் 160 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டு, மாதிரிகள் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பரிசோதனை முடிவுகள் இன்று தெரியவரும்.

இன்னும் வருகை தரவுள்ள 22 மாநிலங்களைச் சேர்ந்த ஹாக்கி வீரர்களுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்