பெரியகுளம் ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர் கல்லூரியில் வரலாற்றுத் துறை தொடங்கி 50 ஆண்டுகள் ஆனதைக் கொண்டாடும் வகையில் பொன் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. துறைத் தலைவர் டெல்பின்பிரேமாதனசீலி வரவேற்றார். கல்லூரிக் குழுமத் தலைவர் ரெஜினாள் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து பேசியதாவது:
1971-ம் ஆண்டு ஆங்கில வழியில் தொடங்கப்பட்ட இத்துறை பின்பு தமிழ் வழி, முதுகலை, ஆராய்ச்சிப் படிப்பு என்று மேம்படுத்தப்பட்டது. இதுவரை 8,797 இளங்கலை மாணவியரும், 605 முதுகலை மாணவிகளும், 34 ஆய்வியல் நிறைஞர் மாணவிகளும், 2 ஆராய்ச்சி மாணவிகளும் பட்டம் பெற்று பல்வேறு துறைகளில் பணிபுரிகின்றனர் என்றார். வரலாற்றுத் துறை முன்னாள் பேராசிரியர் மரியஅல்போன்சாள் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
கல்லூரி முதல்வர் எஸ்.சேசுராணி, இல்லத் தலைமை சகோதரி பி.ஜே.குயின்சிலி ஜெயந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago