7.56 லட்சம் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்குரூ.2,750 கோடியில் நலத்திட்ட உதவிகள் : திருத்தணியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்குகிறார்

By செய்திப்பிரிவு

திருத்தணியில் இன்று நடைபெறும் விழாவில், 7.56 லட்சம் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு ரூ.2,750 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்.

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.5,500 கோடி கரோனா சிறப்புக் கடன் உட்பட ரூ.20 ஆயிரம் கோடி கடன் உறுதி செய்யப்படும், 36,218 சுய உதவிக்குழுக்கள் பயன்பெறும் வகையில் ரூ.809.71 கோடியில் ஊரக வாழ்வாதாரத் திட்டம் செயல்படுத்தப்படும் என்பன போன்ற அறிவிப்புகள் சட்டப்பேரவையில், வெளியிடப்பட்டன.

தற்போது இந்த அறிவிப்புகளை செயல்படுத்தும் நோக்கில், தமிழகம் முழுவதும் 58,463 சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த 7,56,142 உறுப்பினர்களுக்கு ரூ.2,749.85 கோடி மதிப்பிலான கடன் உதவிகள், நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி பட்டாபிராம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் இவ்விழா இன்று காலை நடைபெறுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்