ரங்கம் ரங்கநாதர் கோயில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்க வாசல் திறப்பையொட்டி, திருச்சி மாவட்டத்துக்கு டிச.14-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப் படுகிறது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிலையங்களுக்கும் இந்த விடுமுறை அறிவிப்பு பொருந்தும். எனினும், பள்ளி- கல்லூரி தேர்வுகள் நடைபெறுவதில் இந்த விடுமுறை பொருந்தாது. அதேபோல், அரசின் அனைத்து துணைக் கருவூலங்களும், மாவட்ட கருவூலமும் குறைந்த பணியாளர்களைக் கொண்டு செயல்படும். இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் டிச.18-ம் தேதி வேலைநாளாக அறிவிக்கப்படுகிறது என திருச்சி மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago