திருப்பத்தூர் மாவட்டத்தில் 73 பேர் கைது :

By செய்திப்பிரிவு

திருப்பத்தூர்: பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6-ம் தேதியை (நேற்று) முன்னிட்டு, திருப்பத்துார் மாவட்டம் முழுவதும் உள்ள ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் காவல் துறையினர் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பாலகிருஷ்ணன் தலைமையில், 3 துணை காவல் கண்காணிப்பாளர்கள், 13 காவல் ஆய்வாளர்கள், 30 காவல் உதவி ஆய்வாளர்கள் என மொத்தம் 600 காவலர் கள் மாவட்டம் முழுவதும் நேற்று காலை முதல் இரவு வரை ரோந்து பணியில் ஈடுபட்டனர். மாவட்டத்தில் உள்ள தங்கும் விடுதிகள், நட்சத்திர உணவகங்கள், ஏலகிரி மலைப்பகுதி, ஜவ்வாது மலைப்பகுதி என பல இடங்களில் சோதனை நடத்தினர். அப்போது, மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 73 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அவர்களிடம் இருந்து 146 லிட்டர் சாராயம், வெளிமாநில சரக்கு பாட்டில் 20 லிட்டர், தடை செய்யப்பட்ட 3 கிலோ குட்கா பொருட்கள், 2 நாட்டுத்துப்பாக்கி, 1-கத்தி, கார் மூலம் வெளி மாநிலங்களுக்கு கடத்த முயன்ற 450 கிலோ ரேஷன் அரிசி, ஒரு கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு 73 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்