தேர்தல் நேரத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.11.48 கோடி - திமுக எம்பி கதிர் ஆனந்திடம் வரி வசூலிக்கும் நடவடிக்கைக்கு இடைக்கால தடை :

By செய்திப்பிரிவு

கடந்த 2019-ம் ஆண்டு நாடாளு மன்ற தேர்தலின்போது வேலூர் தொகுதி திமுக வேட்பாளராக போட்டியிட்ட கதிர் ஆனந்தின் வீடு மற்றும் அலுவலகங்களிலும், அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகளிலும் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். இதில் விமலா என்பவரது வீட்டில் இருந்து ரூ. 11.48 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அந்தப்பணம் தன்னுடையது என விமலாவின் சகோதரர் சீனிவாசன் உரிமை கோரினார்.

இந்நிலையில் அந்த தொகை திமுக எம்பி கதிர் ஆனந்துக்கு சொந்தமானது எனக்கூறி அதற்கு வரி வசூலிக்கும் நடவடிக்கையில் வருமான வரித்துறை இறங்கியது. இதை எதிர்த்து கதிர்ஆனந்த் உயர் நீதமன்றத்தில் தொடர்ந்த வழக்கு விசாரணை நேற்று நீதிபதி சி.சரவணன் முன்பாக நடந்தது. அப்போது பறிமுதல் செய்யப்பட்ட அந்த பணத்துக்கும், தனக்கும் தொடர்பில்லை என ஏற்கெனவே விளக்கம் அளித்த பிறகும் வருமான வரித்துறை தனக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருகிறது. எனவே, வருமான வரித்துறையின் நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்கவேண்டும் என கதி்ர் ஆனந்த் தரப்பில் வாதிடப்பட்டது. அதையடுத்து நீதிபதி, இது தொடர்பான வருமான வரித்துறை யின் நடவடிக்கைகளுக்கு இடைக் காலத் தடை விதித்தும், இது தொடர்பாக வருமான வரித்துறை பதில ளிக்கவும் உத்தரவிட்டு விசாரணையை ஜன.3-க்கு தள்ளி வைத்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்