வேலூர் மீன் மார்க்கெட் அருகில் கோட்டை அகழியின் உபரி நீர் கால்வாய் சீரமைப்பு பணியின்போது பக்கவாட்டு சுவர் சரிந்து விழுந்து சேத மடைந்துள்ளது.
வேலூர் கோட்டை அகழியில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றி மீன் மார்க்கெட் அருகேயுள்ள கால்வாயை மீட்கும் முயற்சி கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இதில், 15 அடி ஆழத்தில் உள்ள கால்வாய் கட்டமைப்பை கண்டறிந்த நிலையில் அதில் இருக்கும் அடைப்பு களை சரி செய்யும் முயற்சி நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில், கால்வாய் பகுதியில் சுமார் 15 அடி ஆழத்துக்கு மண்ணை தூர் வாரியதால் பக்கவாட்டில் மாநகராட்சி சார்பில் கட்டப்பட்டிருந்த கால்வாய் தடுப்புச் சுவர் ஆபத்தானநிலையில் இருந்தது. இந்த சுவர் நேற்று காலை திடீரென சரிந்து விழுந்தது. இதனால், கால்வாய் கரை பகுதியில் உள்ள கட்டிடங்கள் ஆபத்தான நிலையில் இருக்கிறது. இந்த கட்டிடங்கள் எந்நேரமும் இடிந்து விழலாம் என்பதால் கால்வாய் மீட்புப்பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago