விருதுநகர் மாவட்டத்தில் அதிகபட்சமாக சாத்தூரில் 112 மி.மீ. மழை : ஆண்டாள் கோயிலுக்குள் புகுந்த தண்ணீர்

By செய்திப்பிரிவு

விருதுநகர் மாவட்டத்தில் இடி, மின் னலுடன் பலத்தமழை பெய்தது. சாத் தூரில் அதிகபட்சமாக 112 மி.மீ. மழை பதிவானது.

கனமழையால் விருதுநகர், வில்லிபுத்தூர், சிவகாசி, அருப்புக் கோட்டை, ராஜபாளையம் பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்தது.

கனமழையால் வில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கருவறையை சுற்றிலும் மழை நீர் தேங்கியது. ரங்கமன்னார் கோயில் வளாகத்திலும் மழை நீர் சூழ்ந்தது. வில்லிபுத்தூர் மடவார் வளாகம் அருகே உள்ள வைத்தீஸ்வரர் ஆலயத்திலும் நீர் சூழ்ந்தது.

அருப்புக்கோட்டையில் உள்ள ஆயிரங்கண் மாரியம்மன் தெப்பம் நிரம்பியது. ராஜபாளையம் அருகே முகவூரில் கண்மாய் நிறைந்ததால் வாய்க்கால் வழியாக தண்ணீர் திறந்துவிடப்பட்டது. ராஜபாளையம், சிவகாசி நகரங்களில் முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கியது.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலை 5 மணிநேரம் பலத்த மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக திண்டுக்கல்லில் 103.8 மி.மீ., வேடசந்தூரில் 101.3 மி.மீ., பழநியில் 72 மி.மீ., மழையளவு பதிவானது.

தொடர் மழையால் நீர்நிலைகள் 80 சதவீதம் நிரம்பின. உபரிநீர் கண்மாய், குளங்களுக்கு திருப்பி விடப்பட்டது. சண்மு கநதி, குடகனாறு ஆகியவற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

திண்டுக்கல் மரியநாதபுரம் பகுதியில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. அங்கு வசித்த 150-க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். திண்டுக்கல் ரயில் நிலையத்தில் தண்டவாளங்கள் நீரில் மூழ்கின.

வடமதுரை அருகே வேல்வார் கோட்டையைச் சேர்ந்த காதர்ஷா மனைவி சுல்தான்பீவி (75), வீட்டில் தூங்கியபோது மண்சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தார்.

பாலகிருஷ்ணாபுரம் ரேஷன் கடையில் மழைநீர் புகுந்ததில் ரேஷன் அரிசி உள்ளிட்ட பொருட்கள் மழைநீரில் நனைந்து சேதமடைந்தன.

கொடைக்கானல் அடுக்கம் மலைச் சாலையில் பாலமலை என்ற இடத்தில் ஏற்பட்ட மண் சரிவால் பாறை உருண்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதை நெடுஞ்சாலைத் துறையினர் அப்புறப்படுத்தினர்.

கொடைக்கானல் மலைப் பகுதியில் நேற்று தொடர்ந்து மழை பெய்ததால் சுற்றுலா தலங்கள் அனைத்தும் மூடப் பட்டன.

இப்பகுதிகளில் சுற்றுலா பய ணிகள் அனுமதிக்கப்படவில்லை

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்