விருதுநகர் மாவட்ட ஏஐடியூசி பட்டாசு-தீப்பெட்டி தொழிற்சங்கச் செயலர் சமுத்திரம், மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் செயலர் பி.லிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ. ராமசாமி உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் நேற்று மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:
விருதுநகர் மாவட்டத்தில் 1,100 பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இத்தொழிலில் பல லட்சம் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
தீபாவளி பண்டிகை அன்று பட்டாசு வெடிப்பதன் மூலம் மாசு ஏற்படுவதாக முரண்பாடான காரணங்களைக் கூறி சிலர் பொது நலன் என்ற பெயரில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதன் மூலம் சரவெடி உற்பத்திக்கு தடை, பேரியம் பயன்படுத்தத் தடை, நேரக் கட்டுப்பாடு என்று பட்டாசுத் தொழிலுக்கு பலவித நெருக்கடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இதனால் பல லட்சம் தொழிலாளர்களின் வாழ்வுரிமை கேள்விக்குறியாகி உள்ளது. எனவே மத்திய அரசு சட்ட திருத்தம் செய்து பட்டாசுத் தொழிலை மாசு பட்டியலில் இருந்து நீக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறி உள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago