தடையை மீறி ஏமன் சென்ற - கன்னியாகுமரி செவிலியர் மதுரை விமான நிலையத்தில் கைது :

By செய்திப்பிரிவு

மத்திய அரசின் தடையை மீறி ஏமன் சென்ற கன்னியாகுமரி செவிலியர் மதுரை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

துபாயில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த பயணிகளிடம் குடியேற்ற அதிகாரிகள் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை ஆய்வு செய்தனர். கன்னியாகுமரி அகத்தீஸ்வரம் தாலுகா பார்வதிபுரத்தைச் சேர்ந்த பாஸ்கரன் என்பவரது மகள் நந்தினி(28). இவர் செவிலியர் வேலைக்காக கடந்த 2019-ம் ஆண்டு திருவனந்தபுரத்தில் இருந்து விமானம் மூலம் துபாய் சென்றார். பின்னர் அங்கிருந்து ஏமனுக்கு செவிலியர் வேலைக்காகப் போனது தெரிய வந்தது.

மத்திய அரசின் கட்டுப்பாடு விதிமுறைப்படி இந்தியர்கள் ஏமன் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை நந்தினி மீறி இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

இதைத் தொடர்ந்து அவர் அவனியாபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். போலீஸார் அவரை கைது செய்து சொந்த பிணையில் விடுவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்