மதுரை கரிமேடு பகுதியைச் சேர்ந்தவர் கோபால்(40). அதே பகுதியைச் சேர்ந்த முருகன் (54), ஹரி (40), ரகுநாதன் (39) ஆகியோர் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகின்றனர்.
இவர்கள் மதுரை மற்றும் திருநெல்வேலியில் உள்ள தனியார் ஆலைக்கு தங்களது வாகனங்களில் பணியாளர்களை ஏற்றிச்செல்லும் வேலையை செய்து வருகின்றனர். கோபால் உள்ளிட்ட 4 பேரும் நேற்று முன்தினம் இரவு மதுரையில் இருந்து காரில் திருநெல்வேலிக்கு புறப்பட்டனர். நேற்று அதிகாலை கோவில்பட்டி அருகே இடைசெவல் பகுதிக்கு கார் வந்தபோது, சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கோபால், முருகன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago