வேலூர்-ராணிப்பேட்டை மாவட் டம் வழியாக ஓடும் பொன்னை ஆற்றில் அதிகபட்ச அளவாக 65 ஆயிரம் கன அடிக்கு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் மேல்பாடி தரைப்பாலம் சேதமடைந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்த தரைப்பாலம் மற்றும் பொன்னை அணைக்கட்டு பகுதியை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தியுடன் சென்று நேற்று ஆய்வு செய்தார். அப்போது, மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், நீர்வளத்துறை செயற்பொறியாளர் ரமேஷ், வருவாய் கோட்டாட்சியர் பூங்கொடி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
பின்னர், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர் களிடம் கூறும்போது, ‘‘பொன்னை ஆற்றில் நீர்வரத்து குறைந்த பிறகு அதற்கான சீரமைப்புப் பணிகள் தொடங்கப்படும். தமிழகத்தில் 1,000 தடுப்பணைகள் கட்டப்படும் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து முதற் கட்டமாக குறுகிய காலத்தில் 100 தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் பாலாற்றின்குறுக்கே 3 இடங்களில் தடுப்பணைகள் கட்டப்பட உள்ளன’’ என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago