ராணிப்பேட்டையில் வரும் 30-ம் தேதி விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் :

By செய்திப்பிரிவு

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டையில் வரும் 30-ம் தேதி விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் வரும் 30-ம் தேதி காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது. ஆட்சியர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் வேளாண், வேளாண் சார்ந்த துறைகளுடன் பிற அரசு துறை அதிகாரிகளும் பங்கேற்க உள்ளனர். இதில், பங்கேற்கும் விவசாயிகள் மற்றும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் பொது பிரச்சினைகளை கோரிக்கை வாயிலாகவும், தனிநபர் பிரச்சினைகளை மனுக்கள் மூலம் தெரிவிக்கலாம்’’ என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்