ராணிப்பேட்டை மாவட்டம் அகரம் கிராமத்தில் ஏரியில் வண்டல் மண் அளவுக்கு அதிகமாக அள்ளப்படுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக வழக்கறிஞர் செந்தமிழ்செல்வன் உயர் நீதிமன் றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘ராணிப்பேட்டை மாவட் டம் அகரம் கிராமத்தில் உள்ள ஏரிக்கு மழைக்காலத்தில் அதிக தண்ணீர் வரத்து உள்ளதால் ஏரிக்கரைகளில் அதிகளவில் வண்டல்மண் சேருகிறது. இந்த வண்டல் மணலை எடுப்பதற்கு தனிநபர் ஒருவருக்கு நீர்வளத்துறை செயலர் கடந்த அக்.26-ம் தேதி அன்று அனுமதியளித்து உத்தரவிட் டுள்ளார். ஆனால், கனரக இயந்திரங்கள் மூலமாக வண்டல் மண் சட்டவிரோதமாக அளவுக்கு அதிகமாகஎடுக்கப்பட்டு வருகிறது. இதனால் ஏரிக்கரை பலவீனம் அடைந்து வருகிறது. எனவே, இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரி களுக்கு உத்தரவிட வேண்டும், என அதில் கோரியிருந்தார்.
இந்த வழக்கை நேற்று விசாரி்த்த பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு, இதுதொடர்பாக ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சி யர் 2 வார காலத்துக்குள் பதிலளிக்க வேண்டும், என உத்தர விட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago