பரமனந்தல் கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் :

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பரமனந்தல் கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் நேற்று நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் தலைமை வகித்தார். மேலும் அவர், வருவாய்த் துறை மூலமாக 54 பேருக்கு ரூ.5.70 லட்சம் மதிப்புள்ள வீட்டு மனைப்பட்டா, 41 பேருக்கு உட்பிரிவு மாறுதலுக்கான உத்தரவு, 39 பேருக்கு பட்டா மாறுதல் உத்தரவு, 72 பேருக்கு ரூ.8.64 லட்சம் மதிப்புள்ள முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட ஓய்வூதிய உதவித் தொகை, வேளாண்மைத் துறை சார்பில் 13 பேருக்கு ரூ.1.18 லட்சம் மதிப்புள்ள சொட்டு நீர் பாசன கருவி மற்றும் தோட்டக் கலைத் துறை, ஊரக வளர்ச்சித் துறை மூலம் 259 பேருக்கு ரூ.1.02 கோடியில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில், கோட்டாட்சியர் வெற்றிவேல், வேளாண் இணை இயக்குநர் முருகன், சட்டப்பேரவை உறுப்பினர் கிரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்