காரைக்கால்: கார்த்திகை மாத முதல் திங்கள்கிழமையையொட்டி, காரைக்கால் கோயில்பத்து நித்யகல்யாணி உடனுறை நித்தீஸ்வர சுவாமி கோயிலில் 1,008 சங்காபிஷேக வழிபாடு நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.
மூலஸ்தானத்தின் முன் சிவலிங்கத்தைப் போன்று 1,008 சங்குகள் அலங்கரித்து வைக்கப்பட்டு, அவற்றில் நீர் நிரப்பப்பட்டு சிறப்பு ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து, பூர்ணாஹூதி செய்து மகா தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர், சங்குகள் கோயில் பிரகாரத்தில் உலாவாக கொண்டு செல்லப்பட்டு, சுவாமிகளுக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago