அரசுக்கு சொந்தமான நிலத்தில் சாகுபடி செய்ததாக 2 பேர் மீது வழக்கு :

By செய்திப்பிரிவு

காரைக்கால்: காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு பகுதியில், வருவாய்த் துறை கட்டுப்பாட்டில் உள்ள தரிசு நிலத்தில், கடந்த சில நாட்களாக சிலர் சாகுபடி பணிகளை மேற்கொண்டு வருவதாக மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் வந்தது.

இதையடுத்து, வருவாய்த் துறையினர் அப்பகுதியில் ஆய்வு செய்தபோது, அண்டூர் பகுதியைச் சேர்ந்த மதியழகன், அவரது உறவினர் மகாலட்சுமி ஆகியோர் நடவுப் பணிகளை மேற்கொண்டிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து கிராம நிர்வாக அதிகாரி உமா அளித்த புகாரின்பேரில், நெடுங்காடு போலீஸார் நேற்று மதியழகன், மகாலட்சுமி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்