தஞ்சாவூர்: ஐப்பசி மாத கடைமுழுக்கையொட்டி, தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு, கும்பகோணத்தில் காவிரி ஆற்றில் நேற்று ஏராளமானோர் புனித நீராடினர்.
ஐப்பசி மாதத்தில் காவிரியில் நீராடுதல் புனிதமானது என்பதும், இந்த மாதத்தில் மாதந்தோறும் நீராட முடியாவிட்டாலும் முதல் நாள் மற்றும் கடைசி நாட்களில் நீராடினாலே புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
கடைமுழுக்கையொட்டி திருவையாறு புஷ்ய மண்டபக் காவிரிப் படித்துறையில் வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து வந்திருந்த ஏராளமானோர் புனித நீராடி, முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர்.
மேலும், ஐயாறப்பர் கோயிலிலிருந்து அஸ்திரதேவர் புறப்பட்டு காவிரி ஆற்றின் புஷ்ப மண்டபப் படித்துறையில் எழுந்தருளி, தீர்த்தவாரி கண்டருளினர்.
இதேபோல, கும்பகோணம் நாகேஸ்வரன் கோயிலில் ஐப்பசி மாத கடைமுழுக்கையொட்டி, கோயிலுள் வளாகத்திலேயே அஸ்திர தேவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மேலும், கோயில் உட்பிரகாரத்தில் பஞ்சமூர்த்தி புறப்பாடும் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று, புனித நீராடினர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago