காரைக்கால்: காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கிகளுடன் இணைந்து முன்னோடி வங்கியான இந்தியன் வங்கி மூலம், வாடிக்கையாளர்கள் தொடர்பு முகாம் நேற்று காரைக்கால் கீழகாசாகுடி பகுதியில் நடைபெற்றது.
வாடிக்கையாளர்கள் வங்கிகளைத் தேடிப் போவதை தவிர்த்து, வங்கிகளே வாடிக்கையாளர்களை நேரடியாக சந்தித்து அவரவர் தகுதிக்கேற்ப கடன் உதவி வழங்கும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 22 வங்கிகள், 300-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் கலந்துகொண்டனர்.
முகாமில் பங்கேற்றோரில் தெரிவு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு வீட்டுக் கடன், வாகனக் கடன், சிறு தொழில் தொடங்குவதற்கான கடன் என ரூ.38 கோடி கடன் உதவி வங்கிகள் மூலம் வழங்கப்பட்டது. இதில், பல்வேறு வங்கிகள் சார்பில் காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. விழாவில், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஏ.எம்.எச்.நாஜிம், எம்.நாக தியாகராஜன், ஆட்சியர் அர்ஜுன் சர்மா, துணை ஆட்சியர் எஸ்.பாஸ்கரன், வட்டார வளர்ச்சி அலுவலர் அருணகிரி, இந்தியன் வங்கி மண்டல மேலாளர் எஸ்.செந்தில்குமார், முன்னோடி வங்கி மேலாளர் உதயகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago