பிரம்மரிஷி மலையில் கார்த்திகை தீப திருவிழா - 2,000 மீட்டர் திரி தயாரிக்கும் பணி தீவிரம் :

By செய்திப்பிரிவு

பெரம்பலூர் அருகே எளம்பலூர் பிரம்மரிஷி மலையில் கார்த்திகை மகா தீப திருவிழாவையொட்டி 2 ஆயிரம் மீட்டர் நீளமுள்ள திரி தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

எளம்பலூர் பிரம்மரிஷி மலை உச்சியில் மகா சித்தர்கள் டிரஸ்ட் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. இதன்படி 39-வது ஆண்டு மகா தீபத்திருவிழா வரும் நவ.19-ம் தேதி மாலை நடைபெறுகிறது.

இவ்விழாவில் 2 ஆயிரம் மீட்டர் நீளமுள்ள திரி, 1008 லிட்டர் நெய், நல்லெண்ணெய், இலுப்பை எண்ணெய் மற்றும் 108 கிலோ கற்பூரம் கொண்டு, 5 அடி உயர செப்புக் கொப்பரையில் தீபம் ஏற்றப்படவுள்ளது.

விழாவை முன்னிட்டு திரி தயாரிக்கும் பணியில் மகா சித்தர்கள் டிரஸ்ட் அறக்கட்டளை இணை நிறுவனர் ரோகிணி மாதாஜி, சுந்தரமகாலிங்கம் சுவாமிகள், தவசிநாதன் சுவாமிகள், மாதாஜி ராதா உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்