அரியலூர்: அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தமிழக முதல்வர் அறிவித்துள்ள இல்லம் தேடி கல்வித் திட்டம் குறித்து தலைமையாசிரியர்களுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது.
கூட்டத்தில் வட்டார கல்வி அலுவலர்கள் கலியபெருமாள், ராசாத்தி ஆகியோர் கலந்துகொண்டு தலைமை ஆசிரியர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர். பயிற்சியின்போது, இல்லம் தேடி கல்வி திட்டத்துக்கு தன்னார்வலர்கள் தேர்வு செய்வது, பள்ளி தகவல் தொழில்நுட்ப மேலாண்மை, மாணவர்களுக்கான மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், கரோனா தடுப்பு விழிப்புணர்வு, சுகாதார விழிப்புணர்வு, குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களை தடுத்தல் உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
ஆசிரியர் பயிற்றுநர்கள் சிவா, ஜெய்சங்கர், டேவிட் ஆரோக்கியதாஸ், சுதா, சம்பத்,வட்டார வள மைய மேற்பார்வையாளர் இளவழகன் மற்றும் தா.பழூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட 85 தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்கள் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago