திருச்சி: ஹஜ் யாத்திரை செல்வோருக்கு உதவும் வகையில் திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் சிறப்பு உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மண்டல பாஸ்போர்ட் அலுவலர் ஆர்.ஆனந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது: ஹஜ் பயணம் மேற்கொள்வோர் தங்களது பாஸ்போர்ட் விவரங்களை ஜன.31-ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என ஹஜ் கமிட்டிக் குழு அறிவித்துள்ளது. எனவே, ஹஜ் பயணத்துக்காக பாஸ்போர்ட் விண்ணப்பித்து, போலீஸ் விசாரணை முடிந்தபிறகும் இதுவரை பாஸ்போர்ட் கிடைக்கப் பெறாதவர்களுக்கு உதவுவதற்காக மரக்கடையிலுள்ள திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் சிறப்பு உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இம்மையத்தில் விண்ணப்பத்தின் தற்போதைய நிலையை இங்கு அறிந்து கொள்ளலாம். குறைகள் இருப்பின் அவற்றையும் நிவர்த்தி செய்து கொள்ளலாம். இந்த மையம் ஜன.31-ம் தேதிவரை இயங்கும்.
இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 0431 – 2707203, 2707404 என்ற தொலைபேசி எண்களிலோ, 7598507203 என்ற வாட்ஸ் அப் எண்ணிலோ, rpo.trichy@mea.gov.in என்ற இ-மெயில் முகவரியிலோ, www.passportindia.gov.in என்ற இணையதளம் வழியாகவோ அல்லது 1800 258 1800 என்ற கட்டணமில்லா அழைப்பு வழியாகவோ தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago