திருச்சி மத்திய சிறையில் உள்ள சிறைவாசிகளின் மறுவாழ்வுக்காக பல்வேறு தொழிற்பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய வேலைவாய்ப்பு பயிற்சி மையம், சிறைத்துறை ஆகியவை இணைந்து 35 சிறைவாசிகளுக்கு துரித உணவு தயாரிப்பு மற்றும் விநியோகம் குறித்து கடந்த 3-ம் தேதி முதல் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வந்தன. இக்காலகட்டத்தில் வாழ்க்கைக் கல்வி, வங்கி சேவை, நிதி ஆலோசனைகள் குறித்தும் அவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டன.
இப்பயிற்சியின் நிறைவு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. திருச்சி சரக சிறைத்துறை டி.ஐ.ஜி கனகராஜ், மத்திய சிறைக் கண்காணிப்பாளர் ஊர்மிளா ஆகியோர் பயிற்சி முடித்த சிறைவாசிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினர். இவ்விழாவில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய வேலைவாய்ப்பு பயிற்சி மைய இயக்குநர் அகல்யா, உதவி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஜோசப் அந்தோனிராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago