புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் உள்ள செவித்திறன் குறைபாடுடையோருக்கான பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என ஆட்சியரிடம் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள செவித்திறன் குறைபாடுடையோருக்கான அரசு நடுநிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
கூட்டத்தில், பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடம் மற்றும் கழிப்பறைகள் கட்ட வேண்டும். கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்தனர்.
பின்னர், கூட்டத்தில் பேசிய ஆட்சியர் கவிதா ராமு, பெற்றோர்கள் தெரிவித்துள்ள கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்றார்.
இக்கூட்டத்தில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன், தலைமை ஆசிரியர் கலியமூர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago