ஹைதராபாத் மக்களவைத் தொகுதி உறுப்பினர் அசாதுதீன் ஒவைசியின் அனைத்திந்திய மஜ்லிசே இத்திகாதுல் முஸ்லிமீன் கட்சியின் (ஏஐஎம்ஐஎம்) தமிழக நிர்வாகிகள் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியில் இணைந்தனர்.
சென்னை திருவல்லிக்கேணி யில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் முன்னிலையில் ஏஐஎம்ஐஎம் மாநிலச் செயலாளர் ஏ.முஹமது இனாயத்துல்லா ஷெரிப், மாவட்டத் தலைவர்கள் எஸ்.மஸ்தான் (வட சென்னை), கே.ரியாஸ் ஷெரீப் (மத்திய சென்னை), ஏ.முஹமது அலி (திருவண்ணாமலை), வசீம் (திருவள்ளூர்) எம்.ஹிதாயத்உல் ஹக் (பெரம்பலூர்), எப்.எம். ஜாகிர் (கடலூர்), ஆர். நவாப்கான் (திருச்சி கிழக்கு), ஜே.ஜாஃபர் ஷரீப் (திருச்சி மேற்கு), ஏ.சிராஜூதீன் (தருமபுரி),
எஸ்.ஏ.ஷேக் இதாயத்துல்லா (கள்ளக்குறிச்சி), பி.ஆஷிக் (நீலகிரி), ஃபாசில் (சேலம்), நபீல்ஜிணைத் (வேலூர்), ஏ.முஹமதுரிஜா (மயிலாடுதுறை), மன்சூர் பாஷா (காஞ்சிபுரம்), எஸ்.அப்பாஸ் (கோவை), கன்னியாகுமரி மாவட்டத் தலைவர் முஹமது யாசீன் (கன்னியாகுமரி), ஜே.இப்ராஹிம் (தூத்துக்குடி) உள்ளிட்ட மாவட்டத் தலைவர்களும், மாநில நிர்வாகிகளும் முஸ்லிம் லீக்கில் இணைந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago