அரியலூர்: அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகேயுள்ள சோழமாதேவி கிராமத்தில் அம்மையன் தெரு பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதியின் அருகேயுள்ள சின்னஏரி தற்போது பெய்து வரும் மழையால் முழுகொள்ளளவை எட்டியதால், ஏரி நிரம்பி வழிந்து, அப்பகுதியில் உள்ள தெருவுக்குள் தண்ணீர் பாய்ந்தோடியது. இதைக் கண்ட அப்பகுதி மக்கள் தண்ணீர் வெளியேறுவதை கட்டுப்படுத்தக் கோரி, தெருவில் நேற்று நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள், தெருவில் தேங்கிய தண்ணீரை வெளியேற்ற உரிய நடவடிக்கை மேற்கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago