அரியலூரில் நவ.16-ம் தேதி மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாம் :

By செய்திப்பிரிவு

அரியலூர்: மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் அரியலூர் மாவட்டத்தில் தசை சிதைவு நோய் மற்றும் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டோருக்காக பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலி, இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் பெற நவ.16-ம் தேதி ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

முகாமில் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியுடைய, 18 வயது நிரம்பிய மாற்றுத்திறனாளிகள் தங்களது மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல், தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை நகல், ரேஷன் கார்டு நகல், ஆதார் அட்டை நகல், பணிச்சான்று, பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-2 ஆகியவற்றுடன் பங்கேற்று விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்