திருச்சி: திருச்சி உறையூர் பகுதியில் வெள்ளப் பாதிப்புக்கு ஆளான மக்களுக்கு காவல்துறை சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.
தொடர் மழை காரணமாக, திருச்சி உறையூர் பகுதியிலுள்ள லிங்க நகர், வின் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இங்கு வசிக்கும் மக்கள் உணவுப் பொருட்களை வாங்குவதற்குகூட வெளியில் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.
இதையடுத்து மாநகர காவல் துணை ஆணையர் ஆர்.சக்திவேல் மற்றும் போலீஸார் நேற்று முன்தினம் இரவு அப்பகுதியிலுள்ள வீடுகளில் வசிப்போருக்கு உணவு வகைகள், பழங்கள், பிரட் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago