திண்டுக்கல்லில் பட்டாசு விற்பனை கடைகளில் ஆட்சியர், எஸ்.பி. ஆய்வு :

By செய்திப்பிரிவு

திண்டுக்கல் நகரில் விதிமுறை களுக்கு உட்பட்டு பட்டாசு கடைகள் செயல்படுகின்றனவா என ஆட்சியர், எஸ்.பி. ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

தீபாவளியை முன்னிட்டு திண்டுக்கல்லில் பட்டாசு விற்பனை செய்யும் கடைகள் விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்படுகிறதா என்றும், தடைசெய்யப்பட்ட சரவெடிகளை விற்பனை செய்கிறார்களா என்பதையும் கண்டறிய ஆட்சியர் ச.விசாகன், எஸ்.பி வி.ஆர்.சீனிவாசன் ஆகியோர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். பட்டாசு விற்பனை கடைகளில் தீயணைப்பு சாதனங்கள் உள்ளனவா, சரியான விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றனா என்பது குறித்தும் ஆய்வு செய்தனர். ஆய்வின்போது கூடுதல் ஆட்சியர் தினேஷ்குமார் உடன் இருந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்