தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் பள்ளி மாணவர்கள் பங்கேற்க அழைப்பு :

By செய்திப்பிரிவு

மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறை சார்பில் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நடத்தப்படுகிறது.

10 முதல் 17 வயதுக்கு உட்பட்டோரிடையே அறிவியல் ஆய்வு மனப்பான்மையை வளர்க்க வேண்டும் என்றநோக்கில் இந்த மாநாடு நடத்தப்படுகிறது.

நிலையான வாழ்க்கைக்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் என்ற கருப்பொருளில் நடக்கும் இம்மாநாட்டில், 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் தங்கள் பகுதியில் இருந்தவாறே 2 மாதங்கள் ஆய்வு செய்து அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். ஒரு குழுவில் இரண்டு குழந்தைகள் ஆய்வு செய்ய ஒரு வழிகாட்டி ஆசிரியர் உதவுவார். வழிகாட்டியாக இருப்பவர் ஆசிரியராக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. 18 வயதுக்கு மேற்பட்ட எவரும் வழிகாட்டியாக இருக்கலாம்.

10 வயது முதல் 13 வயது முடிய உள்ள குழந்தைகள் இளநிலைப் பிரிவிலும் 14 வயது முதல் 17 வயது வரையுள்ள குழந்தைகள் முதுநிலைப் பிரிவிலும் ஆய்வுகள் செய்ய தகுதி உடையவர்கள் ஆவர். மாவட்ட அளவில் தேர்ந்தெடுக்கப்படும் ஆய்வுக் கட்டுரைகள் மாநில அளவிலும் மாநில அளவில் தேர்ந்தெடுக்கப்படும் ஆய்வுக் கட்டுரைகள் தேசிய அளவிலும் சமர்ப்பிக்கப்படும்.

இதில் சேர விரும்பும் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த குழந்தைகள் இணையவழியில் பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர், மாநாட்டு கல்வி ஒருங்கிணைப்பாளர், மாவட்ட கருத்தாளர் ஆகியோரை 9443686097, 9443394233, 9944832003 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்